குட் நியூஸ்: ரேஷன் கடைகளில் 1 கிலோ கேழ்வரகு மாவு இலவசம் - புதுவை முதல்வர் அறிவிப்பு!

 
புதுவை கேழ்வரகு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சத்துணவு வழங்கும் நோக்கில், ஒரு கிலோ கேழ்வரகு மாவு இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு ஏற்கனவே ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 10 கிலோவும், சிவப்பு அட்டைதாரர்களுக்கு 20 கிலோவும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. அண்மையில் 2 கிலோ இலவச கோதுமை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

முக்கிய அறிவிப்பு!! ரேஷன் கடைகள் இந்த நாட்களில் இயங்காது – முழு விவரம் உள்ளே

கோதுமையைத் தொடர்ந்து, சத்து மிகுந்த சிறுதானியமான கேழ்வரகு மாவையும் வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இனி ஒரு கிலோ கேழ்வரகு மாவு இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி அரசு அறிவித்துள்ள சிறப்புப் பொங்கல் தொகுப்பு குறித்தும் கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன: இந்தத் தொகுப்பின் மொத்த மதிப்பு சுமார் ரூ.750 ஆகும். 4 கிலோ பச்சரிசி, 1 கிலோ நாட்டுச் சர்க்கரை, 1 கிலோ பாசிப்பருப்பு, 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய், 300 கிராம் நெய் மற்றும் ஒரு துணிப் பை ஆகியவை இதில் அடங்கும். வரும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகள் மூலமாகவும் இந்தத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும்.

நாளை முதல் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் நேரம் மாற்றம்! தமிழக அரசு அறிவிப்பு!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து வகை (சிவப்பு மற்றும் மஞ்சள்) குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த இலவச கேழ்வரகு மாவு மற்றும் பொங்கல் மளிகைத் தொகுப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் புதுச்சேரி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!