முதல்வர் பைக்கில் வந்து வாக்களிப்பு ... புதுச்சேரியில் வாக்குப்பதிவு பரபரப்பு!
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப். 09) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வரும் நிலையில், மாலை 6 மணி வரை தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் வழக்கம்போலத் தனது எளிமையைப் பறைசாற்றும் வகையில், தனது ஆர்.எக்ஸ் 100 (RX100) பைக்கிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

எந்தவிதமான ஆடம்பரமும் இன்றி, ஒரு சாதாரணக் குடிமகனைப் போல அவர் பைக்கில் வந்து வாக்களித்ததைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போதும் அவர் இதேபோலத் தனது பழைய பைக்கிலேயே வந்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. தற்போதையத் தேர்தலிலும் தனது வழக்கத்தை மாற்றாமல் அவர் அதே பைக்கில் வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முதலமைச்சரின் இந்த வருகையை முன்னிட்டு வாக்குச்சாவடி பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தனது வாக்கினைப் பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். புதுச்சேரியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தலில், முதலமைச்சரே முன்மாதிரியாக வந்து வாக்களித்தது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
