புல்வாமா தாக்குதல் 7ம் ஆண்டு நினைவு நாள்.. வீரர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!
புல்வாமா தாக்குதல் 7ம் ஆண்டு நினைவு நாள்.. வீரர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி! புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்று பிப்ரவரி 14ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 2019ம் ஆண்டு இதே நாளில் புல்வாமா பகுதியில், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

இந்த கொடூரத் தாக்குதலில் சிஆர்எஃப்எப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம், இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “2019ஆம் ஆண்டு இந்த நாளில் புல்வாமாவில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்கிறேன். அவர்களின் தேச சேவை எந்நாளும் நம் நினைவில் நிலைத்து நிற்கும். ஒவ்வொரு இந்தியரும் அவர்களின் வீரத்திலிருந்து உத்வேகம் பெறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
