பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடல்நலக் குறைவு காரணமாக ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சோர்வு காரணமாக பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் திங்கள்கிழமை அதிகாலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், போதைப்பொருள் எதிர்ப்பு இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்க மோகாவிற்கு சென்றார்.
அதன்பிறகு மீண்டும் உடல் அசௌகரியம் ஏற்பட்டதால் திங்கள்கிழமை மாலை மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை முழுமையாக பரிசோதிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. தற்போது அவரது உடல்நிலை நிலையாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேரில் சென்று முதல்வரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பகவந்த் மானின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், விரைவில் வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
