பஞ்சாப் முதல்வர் வெளிநாட்டு பயணம்... மத்திய அரசு அனுமதி மறுப்பு!

 
பஞ்சாப்
 

பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலீட்டை ஈர்ப்பதற்காக, வரும் பிப்ரவரி மாதம் இந்நாடுகளுக்கு பயணம் செய்ய முதல்வர் பகவந்த் மான் மற்றும் தொழிற்சாலைத் துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா திட்டமிட்டிருந்தனர். இதற்காக மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டது.

முதல்வர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அரசியல் அனுமதி அவசியம் என கூறப்படும் நிலையில், இந்த குழுவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கான காரணங்களை மத்திய அரசு தெரிவிக்கவில்லை என, பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளர் பல்டேஜ் பன்னு குற்றம்சாட்டியுள்ளார். இந்த முடிவு அரசியல் ரீதியாக விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே கடந்த 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிக்கு ஆதரவாக செல்ல முதல்வர் பகவந்த் மான் திட்டமிட்டபோதும், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மீண்டும் வெளிநாட்டு பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், மத்திய–மாநில உறவுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!