பிரபல பாடகர் ஹர்மன் சித்து சாலை விபத்தில் பலி!
மான்சா–பாட்டியாலா நெடுஞ்சாலையில் நடந்த கொடூர சாலை விபத்தில் ‘பேப்பர் யா பியார்’ ஹிட் பாடலால் பிரபலமான பஞ்சாபி பாடகர் ஹர்மன் சித்து (37) உயிரிழந்தார். மான்சா அருகே கியாலா கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்த அவர், உள்ளூர் அரண்மனை அருகே அவரது கார் லாரியுடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உருக்க்குலைந்து வாகனம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்தது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திடீர் மரணம் பஞ்சாபி இசை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மண் மணம் மிக்க பாடல் வரிகளும், இனிமையான குரலும் காரணமாக பஞ்சாபி குடும்பங்களில் பரிச்சயமான குரலாக விளங்கியவர் சித்து. எப்போதும் தனது வேர்களுக்கு நெருக்கமாக இருந்த கலைஞராக அவரை ரசிகர்களும் சக கலைஞர்களும் சமூக ஊடகங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

மிஸ் பூஜாவுடன் இணைந்து பாடிய ‘பேப்பர் யா பியார்’ அவருக்கு ஒரே இரவில் கிடைத்த புகழின் அடையாளம். அதன்பிறகு ‘கோய் சக்கர் நாய்’, ‘பெபே பாபு’, ‘பாப்பர் ஷேர்’, ‘முல்தான் VS ரஷ்யா’ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை வழங்கி பஞ்சாபி இசை உலகில் தனக்கென இடம்பிடித்தார். ஹர்மன் சித்துவின் மறைவுடன் பஞ்சாப் ஒரு திறமையான பாடகரையும், அதன் மண்ணின் உணர்வை சுமந்த குரலையும் இழந்துவிட்டதாக ரசிகர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
