114 ரஃபேல் விமானங்கள் கொள்முதல்... பாதுகாப்பு அமைச்சக கூட்டத்தில் ஒப்புதல்?
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், இந்திய விமானப்படைக்கு 114 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த மாத இறுதியில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியா வருகை தரும் போது, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே 36 ரஃபேல் விமானங்களை இந்திய விமானப்படை பயன்படுத்தி வருகிறது.
மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் (மெரைன்) விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களை முன்னிட்டு கூடுதல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தகவல்களின் படி, ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பில் 114 ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட உள்ளன. இதில் 18 விமானங்கள் முழுமையாக தயாரான நிலையில் வழங்கப்படும். மீதமுள்ள 96 விமானங்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன.கொள்முதல் செய்யப்பட உள்ள விமானங்களில் 88 ஒற்றை இருக்கை (Single-seat) மற்றும் 26 இரட்டை இருக்கை (Twin-seat) ரஃபேல் விமானங்கள் இடம்பெறுகின்றன. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் வான்படை திறனை மேலும் வலுப்படுத்தும் என மதிப்பிடப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
