நெருக்கும் ஓபிஎஸ்... பொதுச்செயலாளர் பதவிக்கே ஆபத்து... இன்று கூடுகிறது அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்.. என்ன செய்யப் போகிறார் இபிஎஸ்?!

பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உண்மையிலேயே ரத்தத்தை சிந்தி வளர்த்த கட்சி அதிமுக. எத்தனைக் கனவுகள்? எம்.ஜி.ஆரை இந்துக்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்று மதங்களைக் கடந்து, மொழி, இனத்தைக் கடந்து தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் புகைப்படம் மாட்டி கடவுளாகவே கும்பிட்டு வந்தனர் மக்கள். அந்த காலத்தில் வீட்டில் எம்.ஜி.ஆர். புகைப்படம் மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்து திருடாமலே சென்ற திருடர்கள் எல்லாம் இருந்தனர். அப்படியெல்லாம் வளர்ந்த கட்சி இன்று களையிழந்து நிற்கிறது.
அதிமுக யார் கையில்? இரட்டை இலை யாருக்கு? என்பதில் இன்னமும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. கட்சிக்குள் சலசலப்பு, செங்கோட்டையனுக்கு பெருகும் ஆதரவு, மத்திய அரசின் அழுத்தம், கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கே ஆபத்து என்று அனைத்து பக்கமும் எடப்பாடியாருக்கு அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்ததினமான இன்று பிப்ரவரி 24ம் தேதி மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.மாளிகையில் இன்று 24.2.2025 திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு, "பூத் கமிட்டி அமைப்பது, கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில், விளையாட்டு வீரர்களை அதிக அளவில் சேர்ப்பது" முதலான பணிகளை விரைந்து முடிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!