'புஷ்பா 2' கூட்ட நெரிசல் வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுன் பெயர் 11-வது குற்றவாளியாக சேர்ப்பு!

 
அல்லு அர்ஜுன்

புஷ்பா 2 படக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் பலியான வழக்கில், நடிகர் அல்லு அர்ஜுனை 11-வது குற்றவாளியாக (A11) சேர்த்து சிக்கடப்பள்ளி போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 'புஷ்பா 2' திரைப்படம் வெளியான போது, ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் நடைபெற்ற பிரிமியர் ஷோவிற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வருகை தந்தார். அப்போது அவரைக் காணத் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களிடையே ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார். நீண்ட சிகிச்சை பெற்றும், அந்தச் சிறுவனால் இன்னமும் பேசவோ, நடக்கவோ முடியாத நிலை நீடிக்கிறது.

அல்லு அர்ஜுன்

இந்தச் சம்பவம் தொடர்பாக மொத்தம் 23 பேர் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். ஏ1 (A1): சந்தியா தியேட்டர் நிர்வாகம், ஏ11 (A11): நடிகர் அல்லு அர்ஜுன், தியேட்டர் மேலாளர்கள் மற்றும் 8 பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் ரசிகர்களைத் திரட்டியதே இந்த விபத்திற்குக் காரணம் எனப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன்
காயமடைந்த சிறுவன் ஸ்ரீதேஜின் மருத்துவச் செலவுக்காக அல்லு அர்ஜுன் ரூ.75 லட்சம் வழங்கியுள்ளார். தயாரிப்பாளர் தில் ராஜு ரூ.2 கோடி நிதியுதவி செய்துள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, ஒரு நாள் சிறையில் இருந்த பிறகு ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த விரிவான குற்றப்பத்திரிகை, அல்லு அர்ஜுனுக்கு சட்டரீதியாகப் புதிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!