செம மாஸ்... புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா, சமந்தா... ரசிகர்கள் கொண்டாட்டம்!

 
புஷ்பா 2
 


படத்தோட பேரு தெரியாதவங்க கூட ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் வரிகளைச் சொன்னால் கிறங்கி போவார்கள். அப்படி சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து தெறி ஹிட் கொடுத்த ‘புஷ்பா’ படம் நடிகை ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்களின் மனசுக்குள் சிம்மாசனத்தில் உட்கார வைத்தது. 

புஷ்பா 2

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் புஷ்பா படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதில் ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி ரசிகர்களை கிறங்கடித்திருந்தார் என்றால், பாடலைப் பாடிய நடிகை ஆண்ட்ரியாவையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள். கன்னடப் படம் ஒன்று நாடு முழுவதும் ஹிட்டாகி பான் இந்தியா படமாக மாறியது. 

புஷ்பா 2

இந்நிலையில், புஷ்பா படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் குத்து பாடலுக்கு இந்தி நடிகைகள் ஆட இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில் ஸ்ரீலீலா ஒரு குத்துப் பாடலுக்கு ஆட இருக்கிறார். அதே சமயம் அவருடன் இணைந்து நடிகை சமந்தாவும் ஆட இருப்பதாகவும் வரும் நவம்பர் 6ம் தேதி இதற்கான படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!