கரூர் கோர நெரிசல்... புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவுக்கு டெல்லி சிபிஐ சம்மன்...
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநில அரசியலை உலுக்கியது. கூட்ட அனுமதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கடும் விமர்சனங்கள் எழுந்தன. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கில் தவெக முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு டெல்லி சிபிஐ தலைமையகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அனைவரும் டிசம்பர் 29-ம் தேதி டெல்லியில் ஆஜராக உள்ளனர்.

அதிக அளவில் திரண்ட கூட்டமே இந்த துயரத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. பலர் மூச்சுத் திணறலால் உயிரிழந்தனர். கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே ஏற்பட்ட இந்த சட்ட சிக்கல், தவெகவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
