லாக்கப் மரணத்திற்கு பொறுப்பேற்று காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க... புஸ்ஸி ஆனந்த் கண்டனம்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞர் லாக்கப் மரணம் அடைந்துள்ளார். இதனையடுத்து அந்த காவல்நிலையத்தில் பணிபுரிந்த 6 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு தவெக உட்பட பல எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ”சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செய்யப்பட்ட இளைஞர் மரணத்தில் போலீஸாரை கைது செய்ய தவெக வலியுறுத்தியுள்னர். தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
— TVK Party HQ (@TVKPartyHQ) June 29, 2025
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கபட நாடகத் திமுக ஆட்சியில், காவல் துறையின் கட்டுப்பாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர் உயிரிழப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பல சம்பவங்கள், இதற்கு உதாரணமாக உள்ளன. அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கு. கனகம்மாசத்திரம் கர்ப்பிணிப் பெண்ணைக் காவலர் காலால் உதைத்த சம்பவம், த.வெ.க. தலைவர் உருவம் பதித்த கைக்குட்டையை வைத்திருந்த கல்லூரி மாணவர் மீது விசாரணை என இந்த ஆட்சியில் காவல் துறையின் அராஜகப் போக்கைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
பாதிக்கப்பட்டுப் புகார் அளிக்க வருவோர் மீதே காவல் துறை வழக்குப் பதிவு செய்த வரலாறும் இந்த அவல ஆட்சியின் அடையாளமாக இருக்கிறது. காவல் துறையின் போக்கைக் கவனித்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது காவல் துறையின் ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு மாதிரியும், ஆளும் கட்சியாக மாறிய பின் ஒரு மாதிரியும் பேசுவது என்பது, தற்போதைய ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை. இனி வரும் காலங்களில் இது போன்ற ஒரு சம்பவம் நிகழாதவண்ணம், காவல் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!