தவெக பூத் கமிட்டி மாநாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி புஸ்ஸி ஆனந்த் படுகாயம்... தொண்டர்கள் அதிர்ச்சி!

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தனிவிமானத்தில் காலை கோவை வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் 2000 க்கும் அதிகமான தொண்டர்கள் குவிந்ததால் கோவை ஸ்தம்பித்தது.
நடிகர் விஜய் ஏர்போர்ட்டில் இருந்து ரோடு ஷோவுக்காக திறந்த வெளி வாகனத்தில் சென்ற நிலையில் அவருக்கு தொண்டர்கள் செல்லும் வழியெல்லாம் வரவேற்பு கொடுத்தனர். சில தொண்டர்கள் பிரச்சார வாகனத்தின் மீது ஏறியதால் பரபரப்பு நிலவியது. இருப்பினும் நடிகர் விஜய் சிரித்த முகத்துடன் அவர்களுக்கு துண்டை போட்டு மகிழ்வித்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய்யை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் புஸ்ஸி ஆனந்திற்கு கூட்ட நெரிசலில் சிக்கி காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளித்தது. தற்போது புஸ்ஸி அனந்த் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!