சாலையோரங்களில் தண்ணீர் பந்தல் வைங்க... திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்..!

 
ஸ்டாலின்

தமிழகத்தில் இப்போதே  பெரும்பாலான மாவட்டங்களில் கோடைகால வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மார்ச் மாத தொடக்கத்திலேயே  வெப்பம் அதிகரித்து வரும் நிலையில்  தமிழக மக்களை இந்த கோடைக் கால வெப்பத்திலிருந்து காக்க  திமுக சார்பில், தமிழகத்தில் உள்ள மாநகர, நகர, பகுதி, பேரூர், வட்டம் மற்றும் கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் - மக்கள் அதிகம் கூடும் இடங்களான தெருமுனைச் சந்திப்புகளிலும் - சாலை மற்றும் தெருக்கள் ஓரமாகவும், போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் யாருக்கும் எவ்வித இடையூறு இல்லாமல் “தண்ணீர் பந்தல்” அமைத்து, பொதுமக்களின் தாகம் தீர்த்திட வேண்டும். 

முதல்வர் ஸ்டாலின்

திமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்ற கோடை வெப்பத்தை தணிக்கும் பொருள்களை மக்களுக்கு வழங்கி, அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டும்.

ஸ்டாலின்

மாவட்ட - மாநகர - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்ட - கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கோடை காலம் முழுவதும் இந்த தண்ணீர் பந்தல் தொடர்ந்து செயல்பட, தங்களை இந்த பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web