மன்னிச்சிடுங்க... உக்ரைன் போர் பற்றி அப்பாகிட்ட பேச முடியாது... புதின் மகள் பத்திரிகையாளரிடம் வருத்தம்? ... வைரல் வீடியோ!

 
putin
 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் 22 வயது மகள் என கூறப்படும் லூயிசா ரோசோவா, பாரிஸில் ஒரு உக்ரைனிய பத்திரிகையாளர் ஊடக விசாரணையில்   தனது தந்தையின் உக்ரைன் போருக்காக வருந்துவதாகவும், அதற்காக  மன்னிப்பும் தெரிவித்தார். வீடியோவில் முகமூடி அணிந்த ரோசோவா, நடக்கும் விஷயங்களை   தன்னால் மாற்ற முடியாது என்றும், போரைக் கட்டுப்படுத்த அதிகாரம் இல்லை  என்றும் தெரிவித்தார்.

உக்ரைனிய பத்திரிகையாளர் தனது சகோதரர் ரஷ்ய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறுகிறார். அப்போது, ரோசோவா “அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” எனவும்,  பத்திரிகையாளர் தந்தையை போரைக் கட்டுப்படுத்த சொல்லும்போதும், ரோசோவா தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் கூறிவிடுகிறார்.  இந்த உரையாடல் முடிவில், ரோசோவா தனியாக இருக்க அனுமதி  அந்த இடத்தை விட்டு சென்றார்.

ரோசோவா பாரிஸில் கலைப் பள்ளியில் பயின்று வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு ரஷ்ய ஊடக விசாரணை அறிக்கையில் அவரது அடையாளம் வெளிப்பட்டது. “விளாடிமிரோவ்னா” என்ற பெயர் அவரது பிறப்புச் சான்றிதழில் இடம்பெறுவதால் புடினின் மகளாக இருப்பது பற்றிய சந்தேகம் அதிகரித்துள்ளது. இதுவரை புடின் தனிப்பட்ட குடும்ப விவரங்களை திறந்தவெளியில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!