புட்டபர்திக்கு சென்னை–திருவனந்தபுரத்திலிருந்து சிறப்பு ரயில்கள்... நாளை முன்பதிவு தொடக்கம்!
சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆந்திராவில் உள்ள புட்டபர்தி அருகே அமைந்த சத்ய சாய் பி நிலையத்திற்கு சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து வரும் 23-ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06065) மறுநாள் காலை 9.10 மணிக்கு சத்ய சாய் பியை அடையும். திரும்பும் ரெயில் (06066) 24-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு சத்ய சாய் பியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு எழும்பூரை வந்தடைகிறது.

திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து 23-ஆம் தேதி மாலை 6.05 மணிக்கு புறப்படும் ரெயில் (06067) மறுநாள் மதியம் 1.30 மணிக்கு சத்ய சாய் பியை அடையும். திரும்பும் ரெயில் (06068) 25-ஆம் தேதி இரவில் புறப்பட்டு, மறுநாள் மாலை 6 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
