துபாயில் சிக்கிக் கொண்ட பி.வி. சிந்து, சோனல் சவுகான் ... பிரதமரிடம் உதவி கோரல்!

 
sindhu

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதிக விமானங்கள் இயங்கும் துபாய் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் கூடி பதற்றமான சூழல் நிலவுகிறது. பாலிவுட் நடிகை சோனல் சவுகான் துபாயில் சிக்கியுள்ளதாகவும், பாதுகாப்பாக நாடு திரும்ப மத்திய அரசு உதவ வேண்டும் என நரேந்திர மோடிக்கு சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல் ஒலிம்பிக் பதக்க வீராங்கனை பி.வி. சிந்துவும் தனது பயிற்சியாளருடன் துபாய் விமான நிலையத்தில் சிக்கியுள்ளார். சில மணி நேரங்களுக்கு முன்பு வெடிச் சத்தம் கேட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். துபாய் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் உதவி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!