நண்பர்களுடன் தகராறு.... வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!
May 10, 2025, 13:00 IST
தூத்துக்குடி மாவட்டத்தில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 8வது தெருவைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் மகன் காட்சன் (18). மீனவர். இவர் நேற்றிரவு நண்பருடன் சேர்ந்து மது குடித்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த காட்சன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்..
இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
