மழைக்கால மூக்கடைப்பு, தும்மலிலிருந்து விரைவில் விடுபட சுலபமான வழிமுறைகள்!

 
மூக்கடைப்பு
 

குளிர்காலம் தொடங்கியவுடன் சளி, இருமல், காய்ச்சலுடன் சேர்ந்து பலரையும் அதிகம் வாட்டும் பிரச்சனை தான் மூக்கு அடைப்பு. மூக்கு குழாயில் சளி தேங்கி அடைப்பதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு, தலைவலி, சைனஸ் வலி போன்ற பிரச்சனைகளும் தொடர்கின்றன. இரவு நேரங்களில் தூக்கத்தை கூட இது பாதிப்பதால், அன்றாட வாழ்க்கையே குழப்பமாகிறது.

மூக்கடைப்பு

கொரோனா காலத்திற்குப் பிறகு, சளி–இருமல் அறிகுறிகள் வந்தாலே பலருக்கும் தேவையற்ற பதற்றம் உருவாகிறது. ஆனால், சாதாரண குளிர்கால மாற்றங்கள், ஒவ்வாமை அல்லது சளி காரணமாகவும் மூக்கு அடைப்பு ஏற்படலாம். பொதுவாக, சாதாரண சளி என்றால் சில நாட்களிலேயே பிரச்சனை குறையும். ஆனால், ஒரு வாரத்திற்கும் மேலாக மூக்கடைப்பு தொடர்ந்து நீடித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது அவசியம்.

மாநகராட்சி தீவிரம்! சளி, காய்ச்சல் உடையவர்கள் வீடு, வீடாக கணக்கெடுப்பு!

மூக்கு அடைப்பில் இருந்து நிவாரணம் பெற, வெதுவெதுப்பான நீர் அதிகமாக குடிப்பது, இஞ்சி–தேன் கலந்த சூடான நீர், மூலிகை தேநீர் போன்றவை பயன் தரும். அதேபோல், சூடான நீராவி எடுப்பது சளியை தளர்த்தி மூக்கை திறக்க உதவும். காரமான உணவுகள் தற்காலிகமாக மூக்கு அடைப்பை குறைக்க உதவினாலும், பிரச்சனை நீடித்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது தான் பாதுகாப்பான வழி.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!