இறுதிச் சடங்கில் சோகம்... தயிர் ரைத்தா சாப்பிட்ட 200 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி… !
உத்தரப் பிரதேச மாநிலம் புடான் மாவட்டம் பிப்ரௌலி கிராமத்தில் நடைபெற்ற ஓர் இறுதிச் சடங்கில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 200-க்கும் மேற்பட்டோர் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி நடந்த அந்த நிகழ்ச்சியில், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு வழங்கப்பட்ட உணவை உட்கொண்டுள்ளனர்.
அந்தச் சடங்கில் எருமை மாட்டுப் பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட தயிரால் செய்யப்பட்ட ரைத்தா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அந்த எருமையை சில நாட்களுக்கு முன்பு நாய் ஒன்று கடித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, உணவைச் சாப்பிட்டவர்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்தது.

உடனடியாக சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, 200-க்கும் மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர். ஒரே உணவால் இத்தகைய நிலை ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
