குடியரசு துணைத் தலைவர் கோவை வருகை ... ட்ரோன்கள் பறக்கத் தடை!
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது சொந்த ஊரான திருப்பூரில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்க உள்ளார். பிச்சம்பாளையம் மற்றும் கணக்கம்பாளையம் பகுதிகளில் புதன், வியாழன் என இரண்டு நாள்கள் நடைபெறும் விழாவில் குடும்பத்தினருடன் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது குலதெய்வம் கோயிலுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்யவுள்ளார்.

வியாழக்கிழமை பிற்பகல் கோவைக்கு வரும் அவர், கே.எம்.சி.எச். மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட நரம்பியல் நிறுவனம் மற்றும் புறநோயாளிகள் பிரிவு கட்டடங்களை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் பொன்விழா மற்றும் ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியின் 25-ஆவது ஆண்டு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளுக்காக அவர் புதன்கிழமை மாலை 5 மணிக்கு தனி விமானம் மூலம் கோவைக்கு வருகிறார். அனைத்து நிகழ்வுகளையும் முடித்துவிட்டு வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு புதுதில்லி திரும்புகிறார். அவரது வருகையை முன்னிட்டு கோவை, திருப்பூர் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
