அதிர்ச்சி வீடியோ... ரசிகரை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகை!

கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ராகிணி திவேதி. இவர் தமிழில் அறியான், நிமிர்ந்து நில், கிக் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தென்னிந்திய மொழிகளில் அறியப்பட்ட நாயகியாகவே இருந்து வருகிறார்.
கடந்த 2020 ல் பெங்களூருவிலுள்ள ராகிணியின் இல்லத்தை சோதனை செய்தபோது அவர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததும் போதைப்பொருளைப் பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ராகிணி 140 நாட்கள் வரை சிறையிலிருந்து பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், பெங்களூருவில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திவேதியிடம் புகைப்படம் எடுக்கவும் ஆட்டோகிராஃப் வாங்கவும் ரசிகர்கள் கூட்டமாக அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
அப்போது, திடீரென ரசிகர் ஒருவர் ராகிணியின் கையைப் பிடித்து இழுத்துவிட்டார். இதனால், கோபமடைந்த ராகிணி அந்த ரசிகரின் கன்னத்தில் பளார் என அறைந்து விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!