தேர்தல் ஆலோசனை… ராகுல் தலைமையில் டெல்லியில் முக்கிய கூட்டம்!

 
ராகுல் காந்தி
 

தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளன. காங்கிரஸ் கட்சி, நடிகர் விஜய்யின் தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதேபோல், பீகார் தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகும் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

ராகுல்

இந்த சூழலில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதே நேரத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணி நிலைப்பாடு குறித்து மூத்த தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பொறுப்பேற்ற பிறகு, கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் கிராம கமிட்டிகள் அமைக்கும் பணியை வேகப்படுத்தினார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி கார்கே ராகுல்

தமிழகம் முழுவதும் 18,500 கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு கமிட்டியிலும் 10 பேர் இடம் பெற்றுள்ள நிலையில், சுமார் 2 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்கும் கிராம கமிட்டி மாநாட்டை ஜனவரி இறுதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன் மகளிர் மாநாடு, கன்னியாகுமரியில் மீனவர் மாநாடும் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாளை (ஜன.17) டெல்லியில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!