நடிகராக களமிறங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்… ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ்!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடிகராக அறிமுகமாகவுள்ளார். பிஹைண்ட்வுட்ஸ் தலைமை செயல் அலுவலர் மனோஜ் என்எஸ் இயக்கும் புதிய படத்தில் இந்த ஆச்சரியம் நடந்துள்ளது. பிரபு தேவா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘மூன் வாக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார். இரண்டு கதாநாயகிகளுடன் பிரபு தேவா நடிக்கும் இந்த படம் நகைச்சுவை கலந்த கதையுடன் உருவாகிறது. மேலும் படத்தில் இடம்பெறும் 5 பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மானே பாடியுள்ளார் என்பதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே ‘மூன் வாக்’ படத்தில் இயக்குநர் கதாபாத்திரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் நடித்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணிக்கும் அவர், முதல் முறையாக நடிகராக நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 கோடை வெளியீடாக படம் திரைக்கு வரவுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
