ராகு - கேது பெயர்ச்சி... இந்த 3 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் ஏற்றம்... தொட்டதெல்லாம் துலங்கும்!

 
ராகு புதன்

ஏப்ரல் 26ம் தேதி வரும் ராகு - கேது பெயர்ச்சி ஆகின்ற நிலையில், இந்த 3 ராசிக்காரர்கள் அதிக நற்பலன்களைப் பெற உள்ளனர். வாழ்க்கையில் வரும் காலங்களில் தொட்டதெல்லாம் துலங்கும் யோகம் கிடைக்கப் பெறுகின்றனர்.  

ராகு கேது பெயர்ச்சியைத் தொடர்ந்து நாக கிரகங்களால் யோகங்களை வரவழைத்துக் கொள்ள, நாக தலங்களுக்குச் சென்று வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். சித்திரை 13ம் தேதி ஏப்ரல் 26ம் தேதி மாலை 4.28 மணிக்கு, பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு ராகுவும், உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள்.

பிற கிரகங்களைப் போல ராகுவும், கேதுவும் முன்னோக்கிச் செல்லாமல் பின்னோக்கிச் செல்கின்றன. ஆனால் நம் வாழ்க்கையில் நாம் முன்னோக்கி செல்ல இந்த இரு கிரகங்கள் தான் நமக்கு நல்வழியைக் காட்டுகின்றன.

ராகு கேது பெயர்ச்சி பகவான் ஜோதிடம்

இந்த ராகு - கேது பெயர்ச்சி மேஷம், கன்னி, தனுசு ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு மிகுந்த நற்பலன்களைத் தர காத்திருக்கின்றது. இது நாள் வரையில் ஜாதக ரீதியாக கஷ்டங்களை அனுபவித்து வந்தவர்களுக்கு இந்த மாற்றங்கள் நல்ல மாற்றங்களாகவே அமையும். 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்திற்கு ராகு வருவதால் பொருளாதாரம் மேம்படும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு வந்து சேரும். அதே சமயத்தில் கேதுவும் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிறைய நடைபெறும். 

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் 6-ம் இடத்திற்கு வருகிறார். 6ல் ராகு இருந்து குருகேந்திரத்தில் இருந்தால் 'அஷ்ட லட்சுமி யோகம்' உருவாகும். அதே சமயம் கேது பகவான் 12- இடத்தில் சஞ்சரிக்கப் போவதால் விரயங்கள் கூடுதலாக இருக்கும். அதை சுப விரயமாக மாற்றிக்கொள்வது நல்லது.

ராகு கேது

தனுசு
தனுசு ராசிக்கு 3-ம் இடத்திற்கு ராகு வரப்போகிறார். இது வெற்றி ஸ்தானம். அதே சமயம் கேது பகவான் 9-ம் இடமான பிதுராஜ்ஜித ஸ்தானத்திற்கு வருகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அதே இடத்தில் ராகுவும், கேதுவும் சஞ்சரித்து பலன்களை வழங்க உள்ளார். ராகு பகவான் முன்னேற்றத்தை வாரி வழங்க உள்ளார். இந்த ராகு- கேது பெயர்ச்சியின் போதே அர்த்தாஷ்டம ராகு விலகுவதால் நன்மை ஏற்படும். எனினும் ஆரோக்கிய தொல்லை அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web