மீண்டும் சிக்கலில் சிக்கிக் கொண்ட ராகுல் காந்தி! கூட்டணிக்குள்ளேயே வலுக்கிறது கண்டனங்கள்!

 
ராகுல்காந்தி

மோடி சமூகத்தை இழிவு படுத்தி பேசிய வழக்கில், ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. எம்பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, நிருபர்களைக் கடந்த 25ம் தேதி சந்தித்த ராகுல், 'நான் சார்வர்க்கர் இல்லை. அவர் தான் மன்னிப்பு கேட்டு ஆங்கிலேயேருக்கு கடிதம் எழுதினார். எதற்காகவும், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்' என்றார்.
சாவர்க்கர்

சாவர்க்கரை விமர்சித்ததற்காக, ராகுலுக்கு பாஜக, சிவசேனா கட்சிகள் கடும் கண்டங்களை தெரிவித்தன. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பால்தாக்கரே சிவசேனா கட்சியுடன், தேசிய வாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. சாவர்க்கரை விமர்சித்தற்காக ராகுலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த உத்தவ் தாக்கரே, டில்லியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று முன்தினம் இரவு கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை புறக்கணித்தார்.

கார்கே கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற சரத்பவார்,  'சாவர்க்கரை ராகுல் விமர்சித்ததால், மகாராஷ்டிராவில் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதை தெரிவித்தார். கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றும் நோக்கில், சாவர்க்கரை விமர்சிப்பதை ராகுலும், காங்கிரஸ் கட்சியும் தவிர்க்க வேண்டும் என கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.

உத்தவ் தாக்கரே

'சார்வர்க்கர் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் இல்லை. அவரை விமர்சிப்பதன் மூலம் மோடி மற்றும் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை சீர் குலைக்க வேண்டாம்' என, ராகுலிடம் சரத்பவார் அறிவுறுத்தியுள்ளார். 

வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நான் சாவர்க்கர் இல்லை. அதனால், அவரை போல் மன்னிப்பு கேட்க மாட்டேன் என, ராகுல் கூறியுள்ளார். சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதற்கான ஆதாரத்தை காட்டும்படி ராகுலுக்கு சவால் விடுகிறேன். சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டதை ராகுல் மறந்து விட்டார் போல' என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web