நாளை ராகுல் காந்தி கூடலூர் வருகை!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இன்று (ஜனவரி 13) நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகை தருகிறார். கூடலூரில் உள்ள புனித தாமஸ் பள்ளியின் பொன் விழாவில் பங்கேற்க அவர் வர உள்ளார். இந்த நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
புதுதில்லியில் இருந்து விமானத்தில் மைசூரு வந்த ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கூடலூர்-மைசூரு சாலையில் உள்ள மார்தோமா நகர் பகுதிக்கு பிற்பகல் 3 மணியளவில் வருகிறார். பின்னர் காரில் பள்ளிக்கு சென்று 3.30 மணியளவில் விழாவில் பங்கேற்கிறார். விழா முடிந்த பின் தனியார் அரங்கில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
இதனைத் தொடர்ந்து அவர் கேரள மாநிலம் திருச்சூருக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ராகுல் காந்திக்கு கோசி பேபி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர். அவரது வருகையை முன்னிட்டு கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
