பிரியங்கா காந்தி வீட்டில் விசேஷம்... மகன் ரைஹான் வதேரா நிச்சயதார்த்தம் ?
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் மகன் ரைஹான் வதேராவுக்கு காதலியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தில்லியில் நேற்று இருவீட்டார் மட்டும் கலந்து கொண்ட சிறிய நிகழ்வில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ராஜஸ்தானின் ரந்தம்பூரில் நாளை பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
25 வயதான ரைஹான் வதேரா ஆவணப் புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருகிறார். வனவிலங்கு, தெரு வாழ்க்கை, வணிக புகைப்படங்கள் என பல்வேறு துறைகளில் அவர் எடுத்த புகைப்படங்கள் கவனம் பெற்றுள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு தில்லி மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்ற கண்காட்சிகளில் அவரது படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. அரசியலுக்கு வருவார் என பேசப்பட்ட நிலையில், தற்போது அவரது திருமணம் குறித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரைஹான் கடந்த ஏழு ஆண்டுகளாக அவிவா பைக் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவிவா, தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஊடகத் தொடர்பு மற்றும் இதழியல் படிப்பை முடித்துள்ள அவர், தற்போது கட்டட உள் வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். சமூகப் பிரச்னைகளில் ஆர்வம் கொண்டவர் என கூறப்படும் அவிவா, தேசிய அளவிலான முன்னாள் கால்பந்து வீராங்கனையும் ஆவார். இருப்பினும், இருவரின் நிச்சயதார்த்தம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
