மாற்றுத் திறனாளியை தாக்கிய ரயில்வே காவலர் ... பகீர் சிசிடிவி காட்சிகள்!
மத்தியப் பிரதேசம் நாக்டா ரயில் நிலையத்தில், பிளாட்ஃபார்ம் எண் 1-ல் மாற்றுத்திறனாளி இளைஞர் தூங்கிக் கொண்டிருந்தார். இவரை , ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை காவலர் மான்சிங் கன்னத்தில் அறைந்து, காலணியால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அருகில் இருந்த ரயில் ஏசி கோச் பயணி ஒருவர் இதை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். நெட்டிசன்கள் பலரும் ரயில்வே காவலரின் செயலுக்கு கடும் கண்டனங்களை பதிவிட்டிருந்தனர்.
Nagda Rilway Station, Ujjain, MP.
— Брат (@1vinci6le) December 3, 2025
Cop trashing a disabled person.
Remind me of human Index rankings of India. pic.twitter.com/Fz7ccY0vRv
இந்த வீடியோ வெளிப்பட்டதும், ரயில்வே பாதுகாப்பில் உள்ள அலட்சியமும் ஒழுங்கீனத்தின் பங்களிப்பும் கருத்தில் கொண்டு, GRP SP ரயில் ஸ்ரீ சுக்லா உடனடியாக தலைமை காவலர் மான்சிங்கை சஸ்பெண்ட் செய்து இந்தூர் ரயில்வே லைன் போலீசுக்கு அனுப்பி வைத்தார். இந்த நடவடிக்கை நாக்டா கவுன்சிலர் பிரகாஷ் ஜெயின் புகாரின் பேரில் எடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
