இன்று டெல்டா மாவட்டங்களுக்கு மழை அலர்ட்… விவசாயப் பணிகளுக்கு ‘கிரீன் சிக்னல்’!

 
மழை
 

தெற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இந்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் நோக்கி நகரக்கூடும் என்றும் அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார். இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நிலவரத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில், இன்று (08.12.2025) தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், விவசாயிகள் அனைத்து வகையான வேளாண்மை பணிகளையும் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக பூச்சிக்கட்டுப்பாடு, களைக்கட்டுப்பாடு போன்ற பணிகளுக்கு இன்றைய நாள் மிகவும் ஏற்றதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை (09.12.2025) பிற்பகலில் காவிரி டெல்டா கடலோர பகுதிகளில் மழை தொடங்கி, இரவு நேரத்தில் பரவலாக பெய்யும் என்றும், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் டிசம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் விட்டு விட்டு மழை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் கனமழை, கடலோரத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் வேளாண்மை பணிகளை தற்காலிகமாக ஒத்திவைப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே நேரத்தில் வட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் டிசம்பர் 15 வரை வேளாண்மை பணிகளை பாதிக்கும் அளவிற்கு மழை வாய்ப்பு இல்லை என்றும், சென்னையில் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்டு, நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!