அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின் படி, அடுத்த 3 மணிநேரத்துக்குள் (இரவு 7 மணி வரை) தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சென்னை, கடலூர், காஞ்சிபுரம், நாகை, ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரள கடலோரம் வரை ஒரு கிழக்கு வளிமண்டல காற்றலை காரணமாக, நாளை (ஜன. 26) உள்தமிழக மற்றும் கடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
