மாநிலம் முழுவதும் இன்று இரவு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 
மழை
 

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பலவீனமடைந்துள்ளது. ஆனால், அதன் தாக்கம் தொடர்ந்து நிலவுவதால் சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. வானிலையின் திடீர் மாற்றம் காரணமாக கடற்கரை பகுதிகளில் மேகமூட்டம் நிலவி, சில இடங்களில் குடியிருப்புகள் வரை நீர் தேங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தைவான் சீனா புயல் கனமழை  மழை வெள்ளம்

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவோடு இரவாக மழை அதிகரிக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான மழை

மேலும் ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தேனி, கோவை மலைப்பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த சில மணி நேரங்கள் முக்கியமானவை என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!