13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு...டெல்டா வெதர்மேன் அலெர்ட்!

இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தொடங்குவதற்கான சூழல் ஏற்பட்டிருப்பதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட தகவலின் படி அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுதும் பருவமழை தொடங்கிவிடும். வடக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேசம், மேற்கு வங்க கடற்கரையோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சாதகமான சூழல் நிலவி வருகிறது.
தமிழகத்தில் நேற்று ஜூன் 27ம் தேதி அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 40.4°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. டெல்டா மாவட்டங்களான , கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், புதுக்கோட்டை , சிவகங்கை, மதுரை ,திண்டுக்கல் போன்ற தென் மாவட்டங்களிலும், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி போன்ற பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழை பதிவாகும் என தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!