இன்று காலை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... குடையோட கிளம்புங்க!
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 10 மணி வரை கோயம்புத்தூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தேனி, நீலகிரி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
