தமிழகத்தில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு... வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவு பெறவில்லை!

 
5 மாவட்டங்களில் கன மழை


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவு பெறவில்லை என்றும், பொங்கல் தினமான ஜனவரி 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், "தமிழகத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளது. இதன்படி நடப்பு ஆண்டில் இயல்பை விட 33 சதவீதம் அளவுக்கு வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு காலத்தில் பருவமழை 590 மி.மீ. மழை பெய்துள்ளது. தமிழகத்தில் பெஞ்சல் புயலை ஒட்டி டிசம்பர் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை அதிகனமழை பெய்துள்ளது. நெல்லை, சேலம், தருமபுரி, திருபத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிக மழை பதிவானது.

விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை

2024ல் 4 புயல்கள் ஏற்பட்டன. கடந்த ஆண்டைவிட இம்முறை 143 மி.மீ. மழை அதிகம். 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1,179 மி.மீ. மழை பதிவானது. வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவு பெறவில்லை. பொங்கல் வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு வட கிழக்கு பருவமழை விலகும்" என்று தெரிவித்தார்.
 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!