அதிகாலை பனிமூட்டம் ... இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகரிப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குளிரும் மழையும் சேர்ந்து நிலவும் சூழல் தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு, கேரள கடலோரம் மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நேற்று 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
