மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் காலமானார் … கல்வித்துறைக்கு பேரிழப்பு!

 
ராஜகோபாலன்
 

தமிழ்நாட்டின் மூத்த கல்வியாளரும் ஆசிரியருமான முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னை கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவரது உடல் மருத்துவ ஆய்வுக்காக ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.

1950ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்த அவர் 1990ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டவர். சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக பணியாற்றி கல்வித் துறைக்கு முக்கிய பங்களிப்பு செய்தார். கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் சமச்சீர் கல்வி அமைக்கும் குழுவிலும் உறுப்பினராக இருந்து ஆலோசனைகள் வழங்கினார்.

அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் வாழ்நாள் முழுவதும் உறுதியாக செயல்பட்டவர். கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பல கருத்துகளை முன்வைத்தவர். தினமணி நாளிதழில் கல்வி தொடர்பான கட்டுரைகள் மற்றும் வாசகர் கடிதங்கள் எழுதி வந்தார். அவரது மறைவு கல்வித் துறைக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!