பகீர்... சக பணியாளர்களுக்கு மது கொடுத்து இரும்பு கம்பியால் தாக்கி இரட்டைக் கொலை செய்த பெண் ஊழியர்!
ராஜஸ்தான் மாநிலம் சரிதா நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக் கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்த ரேகா சர்மா, சக ஊழியரான விக்ரம் தாகூருடன் நெருக்கமாக பழகியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரது நண்பர் ராஜேஷுடன் இணைவதற்கும், தனிப்பட்ட காணொளிகளை வெளியிடுவதாகவும் மிரட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.
மனஅழுத்தத்தில் இருந்த ரேகா, கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத நேரத்தில் இருவரையும் வீட்டுக்கு அழைத்தார். அவர்கள் மது அருந்திய நிலையில் இருந்தபோது இரும்புக் கம்பியால் தாக்கி கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் சடலங்களை தோட்டத்தில் புதைத்து அதன் மேல் செடிகள் நட்டு மறைக்க முயன்றார். ஆனால் துர்நாற்றம் வீசியதால் அண்டை வீட்டார் சந்தேகம் கொண்டு தகவல் அளித்தனர்.
காவல்துறையினர் தோண்டி பார்த்தபோது இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன. சோதனைகளில் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. ரேகா கைது செய்யப்பட்டார். மிரட்டலால் இச்செயலில் ஈடுபட்டதாக கூறினாலும், இது திட்டமிட்ட கொலையாகவே கருதப்படுகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
