ராஜேந்திர பாலாஜி பளீச்... தேர்தல் களத்தில் விஜய் இல்ல… எப்பவுமே திமுக-அதிமுக மட்டும் தான்!

தவெக தலைவர் விஜய் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் களமிறங்க முடிவு செய்து அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அடுத்து வரும் தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் இடையே மட்டும்தான் போட்டி எனக் கூறியுள்ளார்.
அவர் பாஜக மற்றும் திமுகவை விமர்சித்து வரும் நிலையில் அதிமுகவை குறித்து இதுவரை ஒரு வார்த்தை கூட விமர்சித்ததில்லை. பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்த போது பழைய பங்காளியான அதிமுகவை மீண்டும் பாஜக பகிரங்கமாக கைபிடித்தது ஒன்று ஆச்சரியப்படுவதற்கு கிடையாது எனவும் திமுகவும் பாஜகவுடன் மறைமுக உறவில் இருப்பதாகவும் விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில் திமுக மற்றும் தவெகவுக்கு இடையே மட்டும்தான் போட்டி என்று விஜய் கூறியதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற பூத் கமிட்டி மாநாட்டில் பேசிய ராஜேந்திர பாலாஜி, அடுத்து வரும் தேர்தலில் திமுகவிற்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே தான் போட்டி என்று விஜய் கூறுகிறார். இதுதான் இந்த வருடத்தின் மிகப்பெரிய காமெடி. தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக இடையே தான் போட்டி. விஜயின் கட்சி தேர்தல் களத்தில் கிடையாது. மேலும் பாமகவில் உட்கட்சி பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என்று கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!