மேடையிலேயே தொண்டரை கன்னத்தில் அறைந்த ராஜேந்திர பாலாஜி… பரபரப்பு வீடியோ!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் தொண்டர் ஒருவரை ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அதிமுக கட்சியின் தொண்டர் நந்தகுமார் மேடைக்கு வந்து ராஜேந்திர பாலாஜிக்கு சால்வை அணிவிக்காமல் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தார்.
நேற்று செங்கோட்டையன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பிரச்சினை,திண்டுக்கல் சீனுவாசன் கலந்து கொண்ட ஒரு நிகழ்சியில் தொண்டர்களை ஒருமையில் பேசினார்,இன்று ராஜேந்திர பாலாஜி நிர்வாகி ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.💪 https://t.co/humSKcL9IM
— Advocate Prashanth (@Advocateklp) March 6, 2025

இதனால் அவர் ஆத்திரமடைந்து மேடையில் வைத்தே நந்தகுமாரை கன்னத்தில் பளார் என அறைந்து விட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டு ஆசுவாசப்படுத்தினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நேற்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்ட அதிமுக பொதுக்குழு நிகழ்ச்சியில் தகராறு ஏற்பட்ட நிலையில் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். சமீப காலமாக அதிமுக பொது மேடைகளில் நிர்வாகிகள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருவது தொடர்கதையாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!