தங்களின் ஸ்டைல் மேஜிக் ரசிகர்களை பல்லாண்டு மகிழ்விக்கட்டும்... சூப்பர் ஸ்டாருக்கு எடப்பாடி பிறந்தநாள் வாழ்த்து!
ரஜினி 75: எடப்பாடி பழனிசாமியின் ஸ்டைலான நல்வாழ்த்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று ரசிகர்கள், திரையுலகம், அரசியல் வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்கள் முழுவதும் ரஜினிக்கு வாழ்த்து பதிவுகள் வெள்ளமாக வந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார்
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) December 12, 2025
திரு. @rajinikanth அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!… pic.twitter.com/zMVfA5iTtI
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். “தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளாக அசைக்க முடியாத பேராளுமையாக விளங்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று பதிவை தொடங்கினார்.
“திரையரங்குகளை திருவிழா மேடைகளாக மாற்ற வல்ல தங்களின் ஸ்டைல் மேஜிக் ரசிகர்களை பல்லாண்டு மகிழ்விக்கட்டும்” என EPS தனது வாழ்த்தை நிறைவு செய்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
