தூத்துக்குடியில் ரஜினி... இருங்க... இருங்க.. நிவாரணமெல்லாம் கிடையாது... ஷூட்டிங்கில் பங்கேற்பு!

 
ரஜினி

இருங்க... இருங்க... அவசரப்படாதீங்க... மழைவெள்ள பாதிப்பு பகுதிகளை எல்லாம் பார்வையிடவில்லை. இதெல்லாம் தன்னால் எப்போதும் செய்ய முடியாது என்பதற்காக தான் நேர்மையாக தலைவர் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்திருந்தார்.  நேற்று ‘வேட்டையன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக  கன்னியாகுமரி சென்றிருந்தார் நடிகர் ரஜினி. இந்நிலையில், ரஜினிகாந்த் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினியின் 170-வது படம் குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தது. இந்தப் படத்தை ‘ஜெய்பீம்’ பட இயக்குநர் ஞானவேல் இயக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.


இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பகத் பாசில், பாகுபலி புகழ் ரானா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பெரும் நட்சத்திர பட்டாளமே உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி இப்படத்தின் தலைப்பான ‘வேட்டையன்’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன் படத்தின் டீசரும் வெளியானது.

வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளிலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையிலும் நடைபெற்றது. மும்பையில் அமிதாப்பச்சன் - ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது வேட்டையன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது.

Vettaiyan

இதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு சென்றார். விமான நிலையத்தில் ரஜினிகாந்த்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் அவரை ரசிகர்கள் பின்தொடர்ந்தவரே இருந்தனர். ரஜினிகாந்த் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web