ரஜினி பெருமிதம்!! ஸ்டாலினை முதல்வராக்கியது தமிழக மக்களின் அங்கீகாரம்!!

 
ரஜினி

தமிழகத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1ம் தேதி அவரது 70வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார். இதனை முன்னிட்டு, திமுக சார்பில், சென்னை பாரிஸ் கார்னரில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் முதல்வரின் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.இங்கு “எங்கள் முதல்வர்,  எங்கள் பெருமை”  எனும் தலைப்பில் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 ஆண்டுகால பயணம் குறித்த  புகைப்பட தொகுப்பு இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

ரஜினி

குறிப்பாக முதல்வரின்  இளம் வயது புகைப்படம் தொடங்கி திமுக உறுப்பினராக அறிமுகமாகி இளைஞர் அணி செயலாளர் செயலளாராக பதவியேற்றுக் கொண்டார். அத்துடன்  அவர் கலந்து கொண்ட போராட்டங்கள் மிசா காலங்களில் சந்தித்த நெருக்கடிகள் மற்றும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற வரைக்கும் பல்வேறு முக்கிய  நிகழ்வுகளுடைய புகைப்படங்கள் தான் இந்த புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. பலரும் பார்த்திராத புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன.  பிப்ரவரி 28ம் தேதி  தொடங்கி மார்ச் 2ம் தேதி வரை புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் அனைவரும் பார்வையிடும் வகையில் இலவச அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரஜினி

இதன் அடிப்படையில் இந்த புகைப்பட கண்காட்சியை பல்வேறு முக்கிய பிரமுகர்களும் தொடர்ச்சியாக நேரில் வந்து பார்த்து ரசித்து வருகின்றனர்.  திரைபிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைவரும் நேரில் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த புகைப்பட கண்காட்சியை ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டு வருகிறார். அவருடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நடிகர் யோகிபாபுவும் உடன் இருந்தனர். . புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பிறகு  நடிகர் ரஜினிகாந்த்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயணம், அரசியல் பயணம் இரண்டுமே ஒன்றுதான்; அவரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான் முதல்வர்  பதவி; அவர் நீண்ட ஆரோக்கியத்துடம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.அவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web