ரஜினி - கமல் இணைப்பு... ஏஐ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மேக்கிங் வீடியோ!
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் புரோமோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்த புரோமோ சமூக வலைதளங்களில் வைரலானது. ரசிகர்கள் உற்சாகமாக பகிர்ந்தனர். திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
WithOut Slow Motion, it’s even more super 🔥
— Movie Verse (@_MovieVerse) February 25, 2026
- Watch their walk without slow motion—it hits different ✨️#KHxRKpic.twitter.com/XnBbcgYrw9
இந்த புரோமோவில் தோன்றிய பெண்கள் எல்லாம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவர்கள் என வதந்திகள் பரவின. சிலர் ரஜினி, கமலே கூட செயற்கை நுண்ணறிவு என கூறினர். இதனால் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.
இந்த நிலையில் படக்குழு மேக்கிங் விடியோவை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் இன்பன் உதயநிதி தயாரிக்கும் இந்த படம் விரைவில் தொடங்க உள்ளது. மேலும் ரஜினி தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
