47 ஆண்டுகள் கழித்து ரஜினி , கமல் மீண்டும் ஒரே படத்தில்... அசத்தல் ப்ரோமோ!
தமிழ் சினிமாவின் இரு மெகா ஸ்டார்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த புதிய படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் படம் உருவாகிறது.
Born Cool. Built Retro. Eternal Swag. 😎#KHxRK Tamil Promo
— Red Giant Movies (@RedGiantMovies_) February 21, 2026
▶️ https://t.co/9rRSNvssoJ@ikamalhaasan @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @DirRajivMenon @Nirmalcuts @KiranDrk #PallaviSingh @amritharam2 @valentino_suren @alagiakoothan @MShenbagamoort3 @arjundurai… pic.twitter.com/qlUHR3FYrC
1970களில் பல படங்களில் இணைந்து நடித்த இந்த இருவரும், 1979ல் வெளியான அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்திற்குப் பிறகு சேரவில்லை. இப்போது மீண்டும் இணைவது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக உள்ளது. ‘ ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ரஜினியுடன் மீண்டும் பணியாற்றும் நெல்சன், இந்த படத்தையும் பெரிய அளவில் உருவாக்கத் தயாராகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார்.
திரையில் போட்டியாளர்களாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாக இருப்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம். தனித்தனி ரசிகர் பட்டாளம் கொண்ட இருவரும் ஒரே படத்தில் நடிப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். ப்ரோமோ வெளியீட்டுடன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த கூட்டணி தமிழ் சினிமாவை மீண்டும் ஒரு முறை அதிரவைக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
