”கண்ணா ஓரமா போய் விளையாடு... ” - கெத்து காட்டிய சூப்பர் ஸ்டார் - வைரலாகும் ரஜினி கடிதம்!
திரைத்துறையின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த், தவெக ஆதவ் அர்ஜுனா அண்மையில் ஒரு நேர்காணலில் தன்னைப் பற்றிக் குறிப்பிட்ட கருத்துக்கள் முற்றிலும் உண்மையில்லாதவை என்று கூறி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தன்னைப் பற்றிப் பேசிய தகவல்கள் தவறானவை என்றும், உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா தனது பேச்சில், ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகள் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இது ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ரஜினிகாந்த், ஆதாரமற்ற கருத்துக்களைக் கூறி பொதுமக்களைக் குழப்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் இந்த நேரடி கண்டனம், தற்போது அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசிக தரப்பிலிருந்தோ அல்லது ஆதவ் அர்ஜுனா தரப்பிலிருந்தோ இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வப் பதிலும் வரவில்லை. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ரஜினிகாந்த் போன்ற ஒரு ஆளுமை ஒரு அரசியல் கட்சி நிர்வாகியின் கருத்தை நேரடியாக மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் ரஜினிகாந்தின் இந்த விளக்கத்திற்கு அவரது ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
