இனிமேல் இப்படி நடக்கக் கூடாது... விமான விபத்து குறித்து நடிகர் ரஜினிகாந்த்!

`வேட்டையன்' திரைப்படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் படம் `கூலி' . லியோ வை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் `கூலி' படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் 'கூலி', 'ஜெயிலர்' படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், " ஆகஸ்ட் 15 ம் தேதி 'கூலி' படம் வெளியாகிறது. 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன" எனக் கூறினார். தொடர்ந்து அகமதாபாத் விமான விபத்து குறித்து " ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஆண்டவன் அருளால் இனிமேல் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்" என கூறியிருக்கிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!