டைரக்டர் நெல்சனுக்கு கேக் ஊட்டிய ரஜினி... ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போ?

இயக்குநர் நெல்சன் பிறந்தநாளைப் படக்குழுவினர் கொண்டாடிய நிலையில், இயக்குநர் நெல்சனுக்கு ரஜினி கேக் ஊட்டி விட்டு, பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்களைப் ஜெயிலர் 2 படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
Team #Jailer2 wishes our blockbuster director, @Nelsondilpkumar, a super happy birthday! 💥#HBDNelson #HappyBirthdayNelson pic.twitter.com/6qST11YFjb
— Sun Pictures (@sunpictures) June 21, 2025
நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் உள்ளார். கூலி திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயிலர் -2 திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நெல்சன் பிறந்தநாளில் ரஜினி கேக் ஊட்டிய புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அந்தப் புகைப்படத்தில் ரஜினி, நெல்சன் உடன் நடிகர் யோகிபாபுவும் இருக்கிறார்.
ஜெயிலர் முதல் பாகத்தில் நடிகை தமன்னா ஆடிய பாடல் ரசிகர்களிடையே மிகவும் வைரலானது. அனிருத் இசையில் படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. தற்போது, ஜெயிலர் - 2 படத்தின் படப்பிடிப்பு கேரளத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு டிசம்பர் இறுதிக்குள் நிறைவடையும் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!