வயதை வென்ற வசீகரம்... ரஜினிகாந்த்துக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதிகாலையிலேயே அவரது இல்லம் முன்பு ரசிகர்கள் பெரும் திரளாக வந்து வாழ்த்து தெரிவித்தனர். அவரை ஒரு பார்வை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.
ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 12, 2025
மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!
ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் #SuperStar @rajinikanth அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள்… pic.twitter.com/txEn7pHwKE
இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாள் வாழ்த்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். “ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்” என்ற வரியால் அவர் பதிவு தொடங்கியது. மேடை பேச்சில் திறமை, மனதளவில் நேர்மை, கள்ளமில்லா நெஞ்சம் என பல சிறப்புகளை நினைவுபடுத்தினார்.
“ஆறிலிருந்து அறுபது வரை அரை நூற்றாண்டாக மக்களை கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு உளம் நிறைந்த வாழ்த்துகள்” என குறிப்பிட்டார். மேலும் ரஜினி தொடர்ந்து வெற்றிப் படைப்புகளை வழங்கி, மக்களின் அன்பும் ஆதரவும் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துத் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
