மாஸ் வீடியோ... ரஜினிகாந்த் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம்!

 
ரஜினி

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புக்கள்   மும்பையில் நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கள் திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது.  படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலை சென்றுள்ளார்.  
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்  .


 

 

அந்த சமயத்தில் ரஜினிகாந்துடன் ரசிகர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  ஏற்கனவே 3 மற்றும்  வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் இயக்கி வரும் படம்  ‘லால் சலாம்’. லைகா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில்  உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் கதாநாயகர்கள். இதில் நடிகர் ரஜினிகாந்த்  சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

ரஜினி

நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினி இப்படி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.   மே 8 ஆம் தேதி லால் சலாம் படத்தில் நடிக்கும் ரஜினியின் கேரக்டர் அறிமுகம் செய்யப்பட்டது. “மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம்” என்ற கேப்ஷனில் வெளியானது.  இந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற   நிலையில் திருவண்ணாமலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web